12 மாதம் காதல்! பெற்றோர் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த சின்ன சேலம் இளைஞர்! ருசிகர சம்பவம்!

திருநங்கையொருவர் பேஸ்புக் மூலம் காதல் கொண்டு திருமணம் செய்துள்ள சம்பவமானது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் திருவந்திபுரம் என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவியின் பெயர் அமுதா. இத்தம்பதியினருக்கு அமிர்தா என்ற மகள் உள்ளார். இவர் ஒரு திருநங்கையாவார். இவர் ஒரு பி.எஸ்.சி பட்டதாரியாவார். கிராம அலுவலர் தேர்விற்கும், காவல் துறையை தேர்விற்கும் படித்து வருகிறார். 

சென்ற ஆண்டு இவர் மும்பையில் வசித்து வந்தார். அப்போது அவருக்கு விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. லக்ஷ்மணன் மும்பை மாநகரில் ஷுட்டிங் செட்டுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இருவருக்கும் பேஸ்புக் மூலம் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது. இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். தொடக்கத்தில் பெற்றோரின் எதிர்ப்பு இருந்தாலும் காலம் செல்லச்செல்ல பெற்றோர் ஒப்புக்கொண்டனர்.

இரு வீட்டாரும் ஒருமனதுடன் திருவந்திபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவநாத சுவாமி திருக்கோவிலில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனால் கோவில் அலுவலர்கள் இந்த திருமணத்திற்கு முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் இருவீட்டாரும் கடலூர் மாவட்ட கலெக்டரிடமிருந்து அனுமதிக்கான மனுவை பெற்றனர். இன்று காலை இருவீட்டாரின் ஆசீர்வாதத்துடன் அமிர்தா மற்றும் லட்சுமணன் திருமணம் செய்து கொண்டனர்.