கூடப்பிறந்த அண்ணனே என் முன்னாடி அப்படி செஞ்சான்! திருநங்கை ஜனனி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

திருநங்கை பெண்ணொருவர் சமுதாயத்தில் தனக்கு நிகழ்ந்த இன்னல்களை பற்றி நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஜனனி என்பவர் ஒரு திருநங்கை. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தன் குழந்தை பருவத்தில் ஆணாக இருந்துள்ளார். ஆணாகவே வளரத்தொடங்கிய இவர் 10 வயதை எட்டிய பிறகு உடலில் ஏற்பட்ட குரோமோசோம் பிரச்சனையினால் பெண்களை போன்று குணாதிசயங்களை பெற்றார். 

பெண்களுக்கு உரிய வீட்டு வேலைகளான சுத்தம் செய்வது, கோலம் போடுவது, விளக்கேற்றி வைப்பது, சமைப்பது ஆகியவற்றை விரும்பி செய்ய தொடங்கியுள்ளார். இதனால் இவரை அக்கம்பக்கத்தினர் கிண்டலடித்து வந்தனர். தன்னைப்பற்றிய கிண்டல்களை கருத்தில் கொள்ளாது ஜனனி தன் வேலைகளை பார்த்து வந்துள்ளார்.

ஜனனியின் தாயார் ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்துள்ளார். வீட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக ஜனனியும் அந்த பெட்ரோல் பங்கில் இணைந்து பணிபுரிந்துள்ளார். அப்போது நீளமாக முடி வளர்த்துக் கொள்ளும் பழக்கத்தை பெற்றுள்ளார். இதனால் அவருடன் வேலை பார்த்த ஊழியர்கள் ஜனனியை கேவலமாக கிண்டல் செய்துள்ளனர்.

ஜனனியின் தாயார் அவரை முடிவெட்ட கூறியபோது இறைவனுக்கு நேர்ந்துவிட்டதாக கூறி சமாளித்துள்ளார். நாளடைவில் மகன் மாறி விடுவான் என்று பெற்றோர்கள் எண்ணி கொண்டிருந்தனர். பின்னர் ஜனனி பாஸ்போர்ட் பெறுவதற்காக டுடோரியல் பள்ளியில் சேர்ந்து 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஜனனி திருநங்கையாக மாறி தன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ஜனனியின் அண்ணனுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. தன் தம்பி திருநங்கையாக மாறியுள்ளதை அண்ணனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. ஜனனியை அவர் அடித்து மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார். மேலும் அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் ஜனனியை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இத்தனை இன்னல்களை சந்தித்துள்ள ஜனனி காவல் நிலையத்தில் கொடுமைப்படுத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.