பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்தி காதல் ஜோடியை சேர்த்து வைத்த திருநங்கைகள்!

பெற்றோர் நிச்சயித்த திருமணத்தை தடுத்து சில திருநங்கைகள் காதல் ஜோடியை சேர்த்து வைத்த சம்பவமானது தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் உதாரமங்கலம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்க நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகளின் பெயர் ஜெயா. ஜெயாவின் வயது 21.சில மாதங்களாகவே ஜெயாவுக்கு நடராஜன் மாப்பிள்ளை பார்த்து வந்தார். ஆனால் ஜெயா தனது சொந்த ஊரையே சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

செங்கிப்பட்டி அடுத்த பாளையப்பட்டி என்னும் கிராமத்தில் துரைமாணிக்கம் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் சித்திரவேல். சித்திரவேலின் வயது 25. ஜெயாவின் காதல் விவகாரம் தெரியாமல் அவருடைய பெற்றோர் சித்திரவேலுடன் ஜெயாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். வருகிற 16-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற வேண்டியிருந்தது.

தனது பெற்றோரை எதிர்த்து இந்த திருமணத்தை நிறுத்தி வைத்த ஜெயாவுக்கு தைரியம் வரவில்லை. விக்னேஷ் உடனடியாக தன்னுடைய உறவினரான சத்யா என்ற திருநங்கையிடம் நடந்தது குறித்து கூறியுள்ளார். உடனடியாக சத்யா தன்னுடன் சில திருநங்கைகளை அழைத்துக்கொண்டு சரபோஜிராஜபுரம் காவல்நிலையத்தில் ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக நடைபெறவுள்ள திருமணத்தை குறித்து புகாரளித்தனர்.

உடனடியாக காவல்துறையினர் ஜெயாவின் பெற்றோரை வரவழைத்தனர். அவர் காதலிக்கும் செய்தியை பெற்றோரிடம் கூறியுள்ளனர். அதனை மதிக்காமல் ஏற்பாடு செய்த திருமணத்தை நடத்த முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். ஜெயா மேஜர் என்பதால் வேறு வழியின்றி பெற்றோர் விக்னேஷுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவித்தனர். உடனடியாக முனியாண்டிபுரத்தில் அமைந்திருந்த கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த சம்பவமானது தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.