ரூ.9 ஆயிரம்! திருநங்கை அக்சயாவிடம் சிக்கிய சோமசுந்தரத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்!

சாலையில் சென்று கொண்டிருந்தவரிடமிருந்து 9 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக திருநங்கை கைது செய்யப்பட்டிருப்பது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் வில்லியனூர் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் சோமசுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர்.  நேற்று சொந்த வேலை நிமித்தமாக புதுச்சேரிக்கு வந்துள்ளார். 

100 அடி ரோடு வழியாக மீண்டும் வில்லியனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் வழியை அக்ஷ்யா என்ற திருநங்கை நடித்துள்ளார். சோமசுந்தரரிடம் அக்ஷ்யா பணம் கேட்டுள்ளார். 100 ரூபாயை சோமசுந்தரம் அக்ஷ்யாவிடம் கொடுத்துள்ளார். சோமசுந்தரரிடம் அதிக அளவில் பணம் இருப்பதை அக்ஷ்யா உணர்ந்துள்ளார்.

எதிர்பாராதபோது சோமசுந்தரத்தின் இருந்த 9 ஆயிரம் ரூபாயை அக்ஷ்யா பறித்து ஓடிவிட்டார். சோமசுந்தரம் இந்த சம்பவம் குறித்து உருளையன்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அக்ஷ்யாவை தேடி அடைந்துள்ளனர்.

பின்னர் அக்ஷ்யாவை அரியாங்குப்பத்தில் வைத்து கைது செய்தனர். மேகம் அவரிடமிருந்த 9 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அக்ஷயா அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.