சகோதரனுடன் திருமணம்! விழுப்புரம் திருநங்கை கொலையின் திடுக் பின்னணி! 7 பேர் சிக்கினர்!

திருநங்கை ஒருவர் கொல்லப்பட்டு சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த சம்பவமானது செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரத்தில் அய்யன்கோயில்பட்டு என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் திருநங்கைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். விருதாச்சலம் பகுதியை சேர்ந்த அபிராமி என்ற திருநங்கை 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதிக்கு வந்துள்ளார். அவருடன் வசித்து வந்த திருநங்கைகளில் ஒருவர் புனிதா.

புனிதாவின் சகோதரரின் பெயர் தங்கதுரை. அபிராமிக்கும் தங்கதுரை நெருக்கம் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அபிராமி தங்கதுரையிடமிருந்து பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணத்தை முதலீடு செய்து அடுக்குமாடி கட்டிடத்தை கட்டியுள்ளார். இதனால் அபிராமி மீது புனிதா கடும் கோபம் அடைந்துள்ளார்.

திருநங்கை கூட்டத்திற்கு அபிராமி தலைவி போன்று செயல்பட்டுள்ளார். இது அங்கிருந்த பிற திருநங்கைகளிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வேலைக்கு சேர்ந்த அபிராமி அங்கு சென்று சரிவர பணிபுரிந்ததால் சகாயம், இம்தியாஸ், தாமஸ் ஆகியோர் அபிராமியை கொலை செய்ய திட்டமிட்டனர்.

17-ஆம் தேதியன்று புனிதா, கயல்விழி, மதுமதி ஆகிய திருநங்கைகள் செஞ்சி நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் தாக்கியுள்ளனர். நிலைகுலைந்துபோன அபிராமியை சகாயம், இம்தியாஸ், தாமஸ் ஆகியோர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளனர்.

செஞ்சி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த சம்பவமானது செஞ்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.