பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி..! இளம் பெண்ணுக்கு கோவிலில் வைத்து தாலி கட்டிய பகீர் சம்பவம்!

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி ஒருவர் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான வில்லிவாக்கத்தில் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 26 இவர் பெண்ணாக பிறந்தார். பின்னர் ஆணாக மாற வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதன்படி அறுவை சிகிச்சையின் மூலம் ஆணாக மாறினார்.

இவருடைய வீட்டிற்கு அருகே சரஸ்வதி என்ற இளம்பெண் வசித்து வந்தார். ராம் ஆணாக மாறிய பிறகு இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இரு வீட்டிற்கும் தெரியாமல் இருவரும் மறைவாக காதலித்து வந்தனர்.

ஆனால் ஒருகட்டத்தில் இந்த காதலை அறிந்து கொண்ட சரஸ்வதியின் பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனிடையே, காதலிலிருந்து விடுபட மனதில்லாத ஜோடி வீட்டைவிட்டு வெளியேறினர். சூலூர் பகுதியிலுள்ள ஒரு கோவிலில், திருநம்பிகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தன்னுடைய மகளை காணவில்லை என்று சரஸ்வதியின் பெற்றோர் வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

திருமணம் முடிந்த கையோடு பாதுகாப்பு வேண்டி சூலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனை அறிந்துகொண்ட சூலூர் காவல்துறையினர் உடனடியாக அவர்களை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவமானது வில்லிவாக்கத்தில் கற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.