ரயில்களை கழுவ பயன்படுத்தும் தண்ணீரில் சுடச்சுட டீ..! சென்னை எழும்பூர் ஸ்டேசன் கடை விபரீதம்! சிக்கிய வீடியோ!

ரயிலை சுத்தப்படுத்தும் தண்ணீரை பாய்லரில் ஊற்றிய டீக்கடை தடை செய்யப்பட்ட சம்பவமானது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 7-வது நடைமேடையில் முகமது அக்பர் என்பவர் உரிமம் எடுத்து கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் ஊழியர் ஒருவர் ரயில் டாங்கர் சுத்தப் படுத்துவதற்காக உபயோகப்படும் தண்ணீரை எடுத்து கடையில் தேனீர் பாய்லரில் ஊற்றுகிறார். 

இதனை அங்கிருந்த பயணி ஒருவர் ரகசியமாக வீடியோவாக எடுக்கிறார். இந்த வீடியோவை அந்த நபர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் என்பவரின் உத்தரவின் பெயரில் அந்த கடை விசாரணை முடியும் வரை மூடப்பட்டுள்ளது.

ரயில்வே தரப்பிலிருந்தும் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளனர். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.