கோலிவுட் நடிகைகளுள் வெற்றி வலம் வரும் ஒருவரான சமந்தாவின் "ஓ பேபி" என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் உடன் பாடல் வரிகளின் வீடியோ பதிவுகளும் வெளியாகி அனைத்து ரக மக்களிடமிருந்தும் நல்ல வரவேற்ப்பை பெற்றன.
அதிக கிளாமர்! முத்தக் காட்சி! கணவனை நெளிய வைத்த சமந்தா! வைரல் வீடியோ!
சமந்தா இறுதியாக "சூப்பர் டீலக்ஸ்" என்ற படத்தில் நடித்திருந்தார். பல முக்கியமான நடிகர்கள் நடித்திருந்த அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை என்பது படக்குழுவினருக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. இந்நிலையில் சமந்தாவின் அடுத்த படத்தின் பெயர் "ஓ பேபி" என்பதாகும். இதனுடைய டீஸர் ஏற்கனவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படத்தில் சமந்தாவுடன் பிரபல தெலுங்கு நடிகர்களான நாக ஷௌர்யா, லக்ஷ்மி, சிந்துஜா ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான நந்தினி ரெட்டி என்பவர் இயக்குகிறார். இந்தப் படமானது "மிஸ் கிரேணி" என்ற கொரிய திரைப்படத்தை தழுவி இயக்கப்படுகிறது.
படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் கதையை ஓரளவிற்கு நம்மால் யூகிக்க முடிகின்றது. 70 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவரின் ஆன்மா 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலிலிருந்து செயல்படுவதே படத்தின் கருவாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் சமந்தா மிகவும் தத்ரூபமாகவும், மகிழ்ச்சியாகவும் நடித்துள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
படத்தின் டீஸர் வெளியீட்டில் கணவன் நாக சைத்தன்யாவுடன் சமந்தா பங்கேற்றார். மனைவியின் முத்தக்காட்சி வந்த போது சமந்தாவின் கணவர் நெளிந்ததை பார்க்க முடிந்தது.
இந்தப் படமாவது எதிர்பார்த்த வெற்றியை அடைந்தால் சமந்தா மகிழ்வார்! பொறுத்திருந்து பார்ப்போம்!