சென்னை பொழிச்சலூரில் செல்போன் பறிப்பு கொள்ளையர்களால் நேற்று கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் இன்று ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பிழைப்பு தேடி சென்னை வந்த இளைஞரை ஒரு செல்போனுக்காக கொடூரமாக கொலை செய்த கொள்ளையர்கள்!
மயிலாடுதுறை யை சேர்ந்த ராஜகண்ணன். (23) வயதான இவர் கடந்த 12 நாட்களுக்கு முன் பொழிச்சலூரில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார். அருகாமையில் உள்ள ஒரு அறையில் தங்கியபடி ஓட்டலில் இவர் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று இரவு வேலை முடிந்து அறைக்கு திரும்பிக்கொண்டு இருந்தபோது கொள்ளையர்கள் ராஜகண்ணனை வழிமறித்துள்ளனர். அத்துடன் அவர் வைத்திருந்த செல்போனை கேட்டுள்ளனர்.
ராஜகண்ணன் தர மறுக்கவே கொள்ளையர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதனால் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜகண்ணன் உயிரிழந்தார். ஒரு செல்போனுக்காக இளைஞனை கொடூரமாக கொலை செய்த கொடூர கொள்ளையர்களை சங்கர் நகர் போலீசார் தேடி வருகின்றனர்.