திடீரென இடிந்து விழுந்த ஹாஸ்பிடல்! சுக்குநூறான பரிதாபம்! டாக்டரின் கதி?

கால்நடை மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன அலங்காநல்லூர் அருகே பாலமேடு எனும் பகுதியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டிருந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் அனைத்து இருக்கும் இம்மருத்துவமனையில் தான் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு மருத்துவராக சுரேஷ் என்பவரும், உதவியாளராக ஹரிகிருஷ்ணா என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

எதிர்பாராத வகையில் இன்று காலை மருத்துவமனையில் மேல் கூரையானது இடிந்து விழுந்துள்ளது. அங்கிருந்த மேஜை மற்றும் நாற்காலியின் மீது பலமாக விழுந்துள்ளது. மருத்துவரும், உதவியாளரும் வெளியே மாடுகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

இந்த சம்பவமானது பாலமேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டின் போது அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனை என்பதால் மருத்துவ மனையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.