இன்று முதலமைச்சர்களுடன் மோடி சந்திப்பு..! அவ்வளவு தான்..! முடிவுக்கு வருகிறது ஊரடங்கு!

பிரதமர் மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் காணொளியில் கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ளார்.


இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே மே 3ஆம் தேதி வரை இரண்டு முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டிருந்தார். மேலும் ஊரடங்கும் சில தளர்வுகளும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் வருகிற மே 17-ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதால் அடுத்து என்ன முடிவு எடுக்கலாம் என்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொளி மூலம் ஆலோசனை செய்ய உள்ளார்.

முன்னதாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடல் மேற்கொண்டார். இந்த கலந்துரையாடலில் சிவப்பு ,ஆரஞ்சு, பச்சை என தொற்று ஏற்பட்ட பகுதிகளை மண்டலங்களாக பிரிப்பதற்கான வழிமுறைகளை பற்றி பல்வேறு தரப்பினரும் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு மாநிலங்களிலிருந்து சொந்த மாநிலங்களுக்கு வரும்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் பல மாவட்டங்கள் சிகப்பு மண்டலங்களாக மாறும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் இயல்பு நிலைக்கு திரும்புவது மிகக் கடினம் என்றும் அரசு அதிகாரிகள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.