நாளை பூர்ணசந்திர கிரகணம்! என்னவெல்லாம் செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?

நாளை செவ்வாய்கிழமை (16.7.2019) 1.32 மணிக்குப் பௌர்ணமி திதி, உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் தொடங்குகிறது. இந்தச் சந்திர கிரகணம் புதன்கிழமை அதிகாலை வரை நீடிக்கிறது.


ஆரம்பம் 1:32 AM மத்யமம் 3.03 AM மோஷம் 4:32 AM

சூரியன், பூமி, மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும்போது சந்திரகிரகணமும் சூரியன் மறைக்கப்படும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

சந்திர கிரகணம் என்பது நிலவு பூமியின் பின்னால் கடந்து செல்லும் பொழுது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். சந்திரகிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. நாளை பூர்ண சந்திர கிரகணம்.

தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, சந்திர கிரகண காலத்தில் நாம் செய்யும் மந்திர ஜபங்கள் நமக்கு அளவற்ற நற்பலன்களைத் தரும். அப்போது நாம் செய்யும் மந்திர ஜபம் ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன்களைத் தரும். கிரகணத்தின் போது திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்ற தெய்வப் பாடல்களை பாராயணம் செய்யலாம். அல்லது, 'ஓம் நமசிவாய', 'ஓம் விஷ்ணவே நம:',  'ஓம் நாராயணாய நம' என்ற நாமாவளிகளை ஜபிக்கலாம். குலதெய்வ மந்திரங் களையும் ஜபிக்கலாம்.

மந்திர ஜபத்துக்குப் பிறகு மறைந்த நம் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். தந்தை இருப்பவர்கள் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது. அதற்குப் பதில் தானம் கொடுக்கலாம்.

கிரகணம் தொடங்குவதற்கு சுமார் ஒன்பது மணி நேரத்துக்கு முன்பாகவே நாம் உணவு உண்டுவிட வேண்டும். அதற்குப் பிறகு கிரகணம் முடியும்வரை எதுவும் சாப்பிடக்கூடாது.

கர்ப்பிணி பெண்கள் சந்திர கிரகணத்தை பார்க்க கூடாது என்ற தினத்தின்போது உறங்கக்கூடாது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது மேலும் கிரகணத்தின் போது வெளியே சென்றால் அவருக்கும் அவருடைய குழந்தைக்கும் பாதிக்கக்கூடியதாக சில கதிர் வீச்சுகள் ஏற்படும் இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில உணவுகள் ஏற்படும்

இதனை ஆராய்ந்து தான் சாஸ்திரங்கள் தனக்கென சில நியதிகளை வகுத்துள்ளன இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான் எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

சந்திர கிரகணம் முடிந்ததும் ஸ்நானம், ஜபதபங்கள், தர்ப்பணம் ஆகியவை செய்யவேண்டும். அன்று தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதமும் பிறக்கிறது. எனவே சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யக்கூடிய தர்ப்பணத்துடன், ஆடி மாதம் பிறந்த பிறகும் மறுபடியும் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். கிருத்திகை உத்திரம் பூராடம் திருவோணம் ஹஸ்தம், ரோகிணி நட்சத்திரக் காரர்கள் சாந்தி செய்து கொள்ளவும்