எனக்கு 26 வயது இருக்கும் போது அவளுக்கு 30 வயது..! ஆனாலும் அவள் மீது ஆசை..!மோகம்..! உண்மையை கூறிய பிரபல நடிகர்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் மகேஷ் பாபு தன்னுடைய 26ஆவது வயதில் 30 வயது பெண்ணிடம் மோகம் கொண்டிருந்ததாக அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார்.


தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் தன்னுடைய அசாதாரணமான நடிப்பில் ரசிகர்களின் பிடித்தமான நடிகராக வலம் வருகிறார். தற்போது நிலவிவரும் கொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர்-நடிகைகள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நடிகர் மகேஷ் பாபுவும் தன்னுடைய வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இவர் பொதுவாகவே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ஆவார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என்னிடம் ஒரு கேள்வி கேளுங்கள்?" என்ற அம்சத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார். இதன் மூலம் ரசிகர்கள் பலரும் நடிகர் மகேஷ் பாபுவுடன் உரையாடி மகிழ்ந்தனர். அப்படியாக ரசிகர் ஒருவர் உங்களுக்கு யாரும் ஏதேனும் மோகம் இருந்து உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து மகேஷ்பாபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "நான் 26 வயதில் மோகம் கொண்டேன், பின்னர் நான் அவர்களை திருமணம் செய்து கொண்டேன்" என்று கூறி தன் மனைவி நர்மதா ஷிரோட்கரை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர்.

மகேஷ் பாபு மற்றும் முன்னாள் மிஸ் இந்தியா நம்ரதா ஷிரோட்கர் ஆகியோர் 2000 ஆம் ஆண்டில் வெளியான வம்சி படப்பிடிப்பின்போது சந்தித்தனர். இதனை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2005ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். இந்த அழகிய தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகனும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்கள் தங்களுடைய 15வது திருமண நாளை கொண்டாடினர். நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா ஷிரோட்கர் மணமகள் மற்றும் தப்பெண்ணம் , தில் வில் பியார் வயர், தெஹ்ஸீப் மற்றும் எல்.ஓ.சி கார்கில் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.