போதை ஊசி போடும் பழக்கம்! நடிகைகள் சார்மி, முமைத் கான் குறித்து பரபரப்பு தகவல்!

அணைத்து துறையிலும் போதைப்பொருள் தடை செய்யப்பட்டுள்ளது.


விளையாட்டுத்துறை, காவல்துறை முதலியவற்றில் போதைப்பொருள் உபயோக டெஸ்ட் எடுக்கப்படுகின்றது. இத்தகைய தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். இதேப்போன்று தெலுங்கு திரைப்பட உலகில் கடந்த 2017 -ஆம் ஆண்டில் சில நடிகர்களை தெலங்கானா அரசு ஒரு சிறப்பு குழுவினை அமைத்து போதைபொருள் சோதனை மேற்கொள்ளுமாரு உத்தரவிட்டது .

இதனை டோலிவுட் போதைப்பொருள் வழக்கு என்று அழைத்தனர். மிகப்பெரிய பிரபலங்களான நடிகர் ரவிதேஜா, பூரி ஜகன்னாத்,தருண் மற்றும் நடிகை சார்மி, முமைத் கான் ஆகியோரை அந்த குழுவினர் பல மணிநேரம் விசாரித்தனர். இவர்கள் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு போதை ஊசி பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்த விசாரணைக்கு முடிவுகளை இன்று அந்த குழு அளித்தது. அதில் தாங்கள் டோலிவுட் நடிகை மற்றும் நடிகர்களுக்கு தொடர்புடைய 62 பேரிடம் விசாரணை நடத்தினோம். அதில் அவர்களுடைய முடிகள், நகங்கள் ஆகியவற்றை சோதித்து பார்த்தோம். 

அதில் எந்தவித தடைசெய்யப்பட்ட மருந்தின் அறிகுறியுமில்லை என்பதால், அவர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளனர். வழக்கில் சிக்கிக்கொண்ட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.