குறையுது குறையுது தங்கம் விலை! குஷியில் பெண்கள்!

சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கம் கொண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் உண்டாகிறது.


நவம்பர் மாதம் 18 ஆம் தேதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.30,320 ஆக இருந்தது. ஆனால் மீண்டும் கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை ஏறிவிட்டது. இன்று மீண்டும் குறைந்துள்ளது..

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,815 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,520 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,654 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,232 ஆகவும் இருந்தது.

ஆனால் இன்று சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,637 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,096 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,798 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,384 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு: 22.11.2019 - 1 grm – Rs. 3798/-, 8 grm – 30,384/- ( 24 கேரட்) 22.11.2019 – 1 grm – Rs. 3637/-, 8 grm – 29,096/- (22 கேரட்) வெள்ளி விலை இன்று கிராமுக்கு 48.30 ஆகவும் கிலோ ரூ.48,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..