பால் விலை திடீர் உயர்வு! லிட்டருக்கு ரூ.2 வரை அதிகரிப்பு!

நாடு முழுவதும் அமுல் நிறுவனம் தனது பால் அடிப்படையான பொருட்களின் மீது லிட்டருக்கு 2 ரூ வீதம் விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது..


குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களின் பால் கூட்டுறவு அமைப்பு சார்பில் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது, பாலின் தட்டுபாடு காரணமாக இந்த திடீர் விலையேற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமுலின் , அமுல் கோல்டு , அமுல் டைமண்ட், அமுல் டசா உள்ளிட்ட பொருட்கள் மீது 1/2 லிட்டருக்கு 2 ரூ வீதமாக விலையேற்றம் செய்யபட்டுள்ளது.

பால் பொருட்கள் மீதான இந்த விலையேற்றத்திற்க்கு மாடுகலுக்கான தீவினத்தின் விலை உயர்வும் காரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்த பால் விலையேற்றம் முதலில் குஜராத் மாநிலத்தில் தான் அமலாக்கபட்டதும், இதே போல கடந்த ஆண்டுகளில் 2017 ஆம் ஆண்டு அமுல் பொருட்கள் மீதான விலையேற்றம் அமலானதும் குறிப்பிடதக்கது