ஆண்ட்ரே ரஸ்ஸலை தூக்க பிளான் போடும் தல தோனி! CSK vs KKR மேட்ச் ரிப்போர்ட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டி 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை ஆல்  ரவுண்டர் அண்ட்ரெ ரஸ்ஸல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி , ரஸ்ஸலை வீழ்த்த மாஸ்டர் பிளான் போட்டு வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.