அனல் பறக்கும் IPL : இன்றைய போட்டிகளில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் பட்டியல் இதோ!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று 8 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்கவுள்ளது.


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே , அஸ்வின் தலைமை தாங்கும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியை இன்றைய போட்டியில் எதிர்கொள்ளவுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓர்  ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்டீவன் ஸ்மித் இந்த போட்டியில் தன்னுடைய திறமையை மீண்டும் உலகிற்கு நிரூபிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓர்  ஆண்டு தடை முடிந்து வந்த சன் ரைசேர்ஸ் அணியின் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 85 ரன்களை எடுத்தார். இதனால் ஸ்மித் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

நட்சத்திர வீரர்கள் :

ராஜஸ்தான் ராயல்ஸ் :

சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், பெண் ஸ்டோக்ஸ்,ஆர்ச்சர்,ஜோஸ் பட்லர்

கிங்ஸ் XI பஞ்சாப்:

கிறிஸ் கெய்ல் , லோகேஷ் ராகுல், முஜீப் உர்  ரஹ்மான்,அஸ்வின், சாமி

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் வந்து ரன்களை குவித்த கிறிஸ் கெய்ல் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. IPL ஹீரோ ஆன இவர் இந்த தொடரிலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என நம்பலாம்.