இன்று ஒரே நாள்..! சென்னையில் 266! கடலூரில் 122! விழுப்புரத்தில் 49..! தமிழகத்தை சூறாவளியாக சுழன்றடிக்கும் கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் சென்னையில் 266 பேரும், கடலூரில் 122 பேரும், விழுப்புரத்தில் 49 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பயங்கரமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவால் 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் சென்னையில் அதிகபட்சமாக 266  பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கடலூரில் இன்று ஒரே நாளில் 122 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் 25 பேரும், திருவண்ணாமலையில் 11 பேரும், திண்டுக்கல்லில் 10 பேரும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒரே நாளில் கொரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்கள் என்று சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னையில் அதிக பாதிப்புகள் இருந்து வந்த நிலையில் தற்போது கடலூரிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.