முதலிடம் பிடிக்க போவது டெல்லியா மும்பையா? வெளியேறப்போவது கொல்கத்தாவா பெங்களூரா?

பரபரப்பான கட்டத்தில் ipl இல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. மாலை 4 மணிக்கு பெரோஷா கொட்லாவில் நடைபெறவுள்ள போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.


இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி பெற்றால் பிலே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்பேய் இல்லை. ஆகையால் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி தனது முழு பலத்துடன் களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு ஈடன் கார்டெனில் நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வி  பெற்றால் பிலே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்பேய் இல்லை. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.