ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்த களமிறங்குவாரா வில்லியம்சன்?

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான IPL போட்டி இன்று இரவு 8மணிக்கு ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது. சர்ச்சைக்குரிய முறையில் அஸ்வின் பட்லரை அவுட் செய்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

இதனால் தங்களது முதல் வெற்றியை பெற இரு அணிகளும் இன்றைய போட்டியில் களமிறங்கும். இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை கடைசி போட்டியில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் இடம் பெறவில்லை. இதனால் புனேஸ்வர் குமார் கேப்டனாக செயல்பட்டார். இன்றைய போட்டியில் கேப்டனாக கேன் வில்லியம்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் பார்மில் இருப்பதால் அணியில் கேன் வில்லியம்சன் இணைந்தால் அணியின் பலம் இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.