பிலே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்? வான்கடேவில் மும்பை , சன் ரைசர்ஸ் பலப்பரீட்சை!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று இரவு 8 மணிக்கு வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.


இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் பிலே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் எந்த தடையுமின்றி பிலே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம். ஆகவே இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். 

சன் ரைசர்ஸ் அணியை பொறுத்தவரையில் அந்த அணியின் தொடக்க  ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பரிஸ்டோவ் இருவரும் சொந்த ஊருக்கு உலகக்கோப்பை பயிற்சிக்காக கிளம்பிவிட்டனர். பல போட்டிகளில் டேவிட் வார்னர் மற்றும் பரிஸ்டோவ் ஜோடி சன் ரைசேர்ஸ் அணியை வெற்றி பெற வைத்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் இல்லாதது சன் ரைசர்ஸ்  அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.