மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஸ்கெட்ச் போடும் ஷ்ரேயஸ் ஐயர்! சமாளிக்குமா மும்பை?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான IPL போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெரோஷா கோட்லா மைதானத்தில் தொடங்கவுள்ளது.


மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்  இது வரை விளையாடிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் ஹர்டிக் பாண்டியா செம பார்மில் உள்ளார். பந்து வீச்சில் மலிங்கா மற்றும் பும்ரா அசத்தி  வருகின்றனர்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பாண்ட் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அந்த அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு 2வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.