இதயம் பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி காரணம்..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்றுவரை சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சென்னையில் நேற்றுவரை சுமார் 1400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் அதிவேகமாக பரவிவரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 3550 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 527 பேரில் ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் உள்ளடங்குவர். இன்று மட்டும் 12000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு சந்தையில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தை தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.