வரும் 18ந் தேதி எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகாது! ஜீ தமிழ் டிவி திடீர் அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது.


 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடந்தன. சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் மேற்குவங்கத்தில் அதிகபட்சமாக 80.9 சதவீத வாக்குகளும், பீகாரில் குறைந்தபட்சமாக 50.3 சதவீத வாக்குகளும் பதிவாகின.

அடுத்த கட்டமாக வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப் பதிவை ஆர்வத்துடன் தமிழக வாக்காளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். பல்வேறு கட்சிகளும் சூடு பறக்கும் பிரச்சரப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மக்களை 100 சதவீதம் வாக்களிக்கச் செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளது. குறும்படங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் அறிவிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு வரும் 18-ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படாது என அறிவித்துள்ள அந்த நிறுவனம் அதை விட முக்கிய வேலையாக வாக்களிக்கும் பணி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.