உங்கள் குழந்தைக்கு படித்தது எல்லாம் மறந்துவிடுகிறதா? ஞாபக சக்தி தரும் அற்புதம் இதோ!

நம் குழந்தைகளுக்கு அறிவு திறன் வளர்வதற்கு கல்வி மிகவும் அவசியமானதாகும்.


ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.

சில குழந்தைகளால் அந்த கல்வியில் சிறந்து விளங்க முடியாது. ஞாபக மறதி, சோம்பல் இவைகளின் காரணமாக அவர்களுக்கு கல்வி கற்பதில் சில தடைகள் ஏற்படும். அந்த தடைகள் நீங்கி, நம் குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் ஒரு சிறந்த வழி உள்ளது. அது தான் ஹயக்ரீவ மந்திரம். உங்கள் குழந்தைகளின் கல்வி நலனுக்கான ஹயக்ரீவர் ஸ்லோகம் இதோ..

சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம் சர்ர்பஜம் சம்பூர்ணம்சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே, ஹயக்ரீவர் சிறப்பு: புதன் பகவான் புத்திகாரகன். புதனின் அதிதேவதை விஷ்ணு பகவானாவார். அசுரர்களிடம் இருந்து வேதங்களை காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் தான் ஹயக்ரீவர். வேதங்களை மீட்ட ஹயக்ரீவர் அதனை பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

வேதங்களை மீட்டதற்கு பிறகும், ஹயக்ரீவரின் கோவம் அடங்கவில்லை. லட்சுமிதேவி தன் அருகில் வந்த பிறகு தான் குறைந்தது. இதனால் இவரை லட்சுமி ஹயக்ரீவர் என்றும் அழைப்பர். இந்த லட்சுமி ஹயக்ரீவர் சரஸ்வதிக்கு குருவாக இருந்தவர் என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல் ஹயக்ரீவரின் முகமானது குதிரை வடிவம் போன்றது. வேகம், ஆற்றல், திறன், புத்திக்கூர்மை இவையெல்லாம் குதிரையிடம் அதிகமாக உள்ளது.

குதிரைக்கு உள்ள சக்தியினை மாணவர்களும் பெற்றால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது உண்மை. கல்வியில் பின் தங்கிய குழந்தைகள் ஹயக்ரீவருக்கு நெய் தீபம் ஏற்றி, ஏலக்காய் மாலை அணிவித்து இந்த மந்திரத்தை தினமும் பதினோரு முறை உச்சரிப்பதன் மூலம் அவர்களின் ஞாபகசக்தியும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கப்படுகிறது.

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவ மூர்த்தியை வணங்குவதன் மூலம் கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அதிகரிக்கும். கல்வித்தடை நீங்கும். அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.

கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார். இந்த வடிவம் ‘லட்சுமி ஹயக்ரீவர்' எனப்படுகிறது. கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்கலாம்.

ஓம் வாகீஸ்வராய வித்ம ஹேஹயக்ரீவாய திமஹி தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்' என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால்,கல்வியில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம்.

செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வணங்கலாம்.