+2 தேர்வு முடிவில் திருப்பூர் ஃபர்ஸ்ட், கடலூர் லாஸ்ட்..!

பிளஸ் டூ தேர்வில் இன்னமும் ஒரு தேர்வு எழுதவேண்டிய மாணவர்களுக்குத் தேர்வு வைத்தபிறகே ரிசல்ட் வெளிவரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஆனால், அதிலிருந்து பல்டியடித்து, திடீரென இன்று பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


வழக்கம் போன்று இந்த தேர்விலும் மாணவிகள் 94.80 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 89.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், மாநில அளவில் முதல் இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்கள் பெற்றுள்ளன. வழக்கம்போல் கடலூர் கடைசி இடம் பிடித்துள்ளது.  

இதில் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாட்களில், தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளவேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.