கள்ளக் காதலி கபளீகரம்! ஜோசியரை போட்டுத் தள்ளி பிட் நோட்டீஸ் கொடுத்த இளைஞர்! பதற வைக்கும் சிசிடிவி!

தனது கள்ளக்காதலியை கபளீகரம் செய்த ஜோதிடர் ஒருவரை இளைஞர் ஒருவர் திருப்பூரில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததுடன் கொலைக்கான காரணத்தை துண்டுச்சீட்டில் பிரின்ட் செய்து பொதுமக்களிடம் கொடுத்துச் சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.


    திருப்பூர் நகரின் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்று பென்னி காம்பவுண்ட் பகுதி. அங்கு காவி வேட்டி, வெள்ளை சட்டை சகிதமாக நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை ஹெல்மெட் அணிந்த வாட்ட சாட்டமான இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். நடந்து செல்லும் நபர் எதற்காக ஹெல்மெட் அணிந்து சென்று கொண்டிருக்கிறார் என மக்கள் அவரை நூதனமாக பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர்.

   திடீரென அந்த ஹெல்மெட்அணிந்திருந்த வாட்டசாட்டமான இளைஞர் தன் கையோடு கொண்டு வந்திருந்த பெரிய வீச்சரிவாளை எடுத்தார். அத்துடன் முன்னால் சென்று கொண்டிருந்த அந்த காவி வேட்டி நபரை ஓங்கி ஒரு அடி தலையில் அடித்தார். இதனால் அந்த காவி வேட்டி நபர் மயங்கி விழுந்த நிலையில் விடாத அந்த ஹெல்மெட் இளைஞர் தனது கையில் இருந்த வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினார். மாறி மாறி ஆவேசமாக அந்த இளைஞர் வெட்டிக் கொண்டிருக்க, அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

   ஒரு கட்டத்தில் சுற்றி இருந்த மக்களை பார்த்து ஆவேசமாக பேசிய அந்த ஹெல்மெட் இளைஞர், என் பிரியாவை வசியம் செய்தவனுக்கு ஏற்பட்ட நிலைமையை பாருங்கள் என்று கத்தினான். அத்துடன் இவன் இனி எந்த பெண்ணையும் வசியம் செய்ய முடியாது என்று கூறிக் கொண்டே மீண்டும் வெட்டினார். இதனால் அந்த காவி வேட்டி நபர் அந்த இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் எதுவுமே நடக்காததை போல அந்த ஹெல்மெட் இளைஞர் சாவகாசமாக நடந்து சென்றான்.

   அத்துடன் கையோடு தான் கொண்டு வந்திருந்த பிட் நோட்டீஸ்களையும் அங்கிருந்த மக்களிடம் விநியோகிவித்துவிட்டு ஓடி தலைமறைவானான். அந்த பிட் நோட்டிசில் கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படம் இருந்தது. மேலும் அந்த நபரின் பெயர் ரமேஷ் என்றும், பூங்காவுக்கு அருகே கிளி ஜோசிம் பார்க்கும் நபர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பூங்காவுக்கு வரும் பெண்களை வசியம் செய்து பாலியல் தொழிலில் ஜோசியர் ரமேஷ் ஈடுபடுத்தி வந்ததாகவும் நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.

   மேலும் தனக்கும் பேயம்பாளையத்தை சேரந்த மோகனப் பிரியா என்கிற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாக அந்த ஹெல்மெட் இளைஞன் தனது பிட் நோட்டீசில் கூறியிருந்தான். இந்த உறவு மூலம் பிரியாவுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும் ஆனால் தற்போது அனுப்பர் பாளையம் காவல் நிலையத்தில் வைத்து தங்களை பிரித்துவிட்டதாகவும் இதற்கு காரணம் ஜோசியர் ரமேஷ் தான் என்றும் பிட் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

   இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிளி ஜோசியர் ரமேஷ் உடலை மீட்டு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகாமையில் உள்ள வணிகவளாகத்தில் இருந்த சி.சி.டிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர. கொலை செய்துவிட்டு நீதிமன்றத்தில் சரண் அடைய உள்ளதாக கூறிச் சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

   இதனிடையே ஹெல்மெட் இளைஞருடன் பழக்கத்தில் இருந்த மோகனப் பிரியா பூங்காவுக்கு சென்று வரும் போது ஜோதிடர் ரமேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரமேசுடன் ஐக்கியமான மோகனப் பிரியா ஹெல்மெட் இளைஞரை தவிர்த்துள்ளார். இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்ற போது போலீசார் மோகனப் பிரியாவுக்கு சாதகமாக பேசி ஹெல்மெட் இளைஞரை விரட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கோபத்தில் தான் ஜோதிடர் ரமேசை இளைஞர் போட்டுத் தள்ளி பிட்நோட்டீஸ் கொடுத்துச் சென்றுள்ளார்.