சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு! கேரளா அரசை கேட்கும் திருமாவளவன்!

சபரிமலைக்கு சாமி தரிசனம் காண வரும் பெண்களுக்கு கேரளா அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.


திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு சென்றடைந்தார். மதுரை விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர் இடம், சபரிமலை வழக்கு குறித்து கருத்து கேட்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த அவர் சபரிமலை வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. ஆகையால் தற்போது எந்தவிதமான கருத்தும் கூற இயலாது. 

கடந்த ஆண்டு கேரள அரசு சபரிமலை ஐயப்பனை காண வந்த பெண் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வித பாதுகாப்பும் நல்ல முறையில் வழங்கியது . அதேபோல் இந்த ஆண்டும் சபரிமலையில் ஐயனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வித பாதுகாப்பையும் கேரள அரசு நிச்சயம் வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் சபரிமலை ஐயப்பனை காணவரும் பெண் பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பினை கேரள முதல்வர் பினராய் விஜயன் நிச்சயம் அளிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.