நீடிக்கும் ஊரடங்கு..! நாடார்கள் என்ன செய்ய வேண்டும்? அண்ணாச்சி கரிக்கோல்ராஜ் கொடுக்கும் செம ஐடியா!

மளிகை கடை அப்படி சொன்னதும் நமக்கு எல்லாம் ஞாபகம் வருவது அண்ணாச்சி கடை தாங்க. அப்படி தனது உழைப்பால் உயர்ந்த கரிக்கோல்ராஜ் அண்ணாச்சி அவர்கள் ஊரடங்கு நேரத்தில் நாடார்கள் எப்படி தங்கள் வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்வது என்பது குறித்து வியாபரிகளுக்கு ஒரு நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். வாங்க அதை பற்றி பார்க்கலாம்.


ஒரு காலத்தில் மக்கள் அனைவரும் அண்ணாச்சி கடையில தான் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி அனைத்தும் வாங்கி கொண்டு இருந்தோம். ஆனால் 21ஆம் நூற்றாண்டில் சூப்பர் மார்க்கெட் மோகம் அதிகம் ஆனதால் மக்கள் அனைவரும் அங்கு சென்று வாங்கும் நிலைமை உருவானது.

.நடுத்தர மக்கள் மட்டும் அண்ணாச்சி கடைகளை நோக்கிய பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழகா மாறியுள்ளது.

இதுகுறித்து நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் அண்ணாச்சி கரிக்கோல் ராஜ் அவர்கள் கொடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், நடமாடும் காய்கறி வாகனங்களுக்கு, மவுசு தற்போது அதிகரித்துஉள்ளது. 

தமிழகத்தில் சென்னையில் தான் அதிக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காணப்படுகின்றது. இதன் காரணமாக சென்னை பகுதி முழுக்க நாளுக்கு நாள் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்தபடி உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, நான்கு நாள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், மக்களின் அடிப்படை தேவையான காய்கறி, பழங்கள் இருப்பிடங்களிலேயே கிடைக்கும் வகையில், நடமாடும் காய்கறி மற்றும் பழ வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கையினால், மக்கள் எந்தவித சிரமமும் இன்றி, அவரவர் வீட்டு வாசலிலேயே, தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

நடமாடும் காய்கறி மற்றும் பழ வாகனங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.  நடமாடும்  காய்கறி வாகனங்கள் போல், மளிகை பொருட்களுக்கும் நடமாடும் வாகனங்கள் வீடு தேடி வந்தால், பயனுள்ளதாக இருக்கும்’ என, சென்னைவாசிகள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

இதனை அறிந்த நமது சமுதாய அண்ணாட்சி கடைகாரர்கள் இந்த வாய்ப்பினை அனைத்து மளிகை கடைக்காரர்களும் பயன்படுத்தி தங்களது பகுதிகளில் வியாபாரத்தினை அதிகரித்து கொள்ள வேண்டும் என்றும் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு தங்களது தொழிலை மேம்படுத்த கொள்ள வேண்டும் அனைத்து மளிகை அண்ணாச்சுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார் நம்ம அண்ணாச்சி.