டைம்ஸ் தமிழ் 2019 இசை விருதுகள். பாடலாசிரியர் தாமரையா.. விவேக்கா?

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது


2019ம் ஆண்டின் சிறந்த சினிமா விருதுகள் அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. வெற்றி பெறும் கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 

சிறந்த பாடலாசிரியருக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய போட்டி இல்லை. எந்த சிக்கலுமே இல்லாமல் விஸ்வாசம் படத்தில் தாமரை எழுதிய கண்ணான கண்ணே பாடல்தான் முதல் இடத்தில் நீடித்து நின்றது. அந்தப் பாடலில் வரும், ’தொடுவானம் தூரம்தான், தொடும்போது அறிந்தேன் நான். விலை இல்லாத ஒன்று அன்பு என்றே இதோ அறிந்தேன்” என்று தந்தையின் பாசத்தை மென்மையாக வடித்திருந்தார் கவிஞர் தாமரை. 

அதே நேரம், பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர் விவேக் எழுதிய சிங்கப்பெண்ணே, ஆழமான அர்த்தமான வரிகளுடனும் பெண்ணுக்கு நம்பிக்கை தரும் விதமாகவும் வந்துநின்று, அத்தனை பேர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. அந்தப் பாடலில் இடம்பெறும் வரிகள் வலியும் அர்த்தமும் நிறைந்தவை.

உன்னால் முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே. 

பரிதாபம் காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே

உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன் முன்னே

பிரசவத்தின் வலியை தாண்ட பிறந்த அக்னி சிறகே எழுந்து வா

இந்தப் பாடல் பெண்ணினத்தின் பெருமையை சொல்வதற்கும், நம்பிக்கை ஊட்டுவதற்குமான பாடல். அதனால் இந்த பாடலுக்கு வலிமையான வரிகள் தந்த கவிஞர் விவேக்கிற்கு டைம்ஸ் தமிழ் 2019 சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் விவேக்.