டைம்ஸ் தமிழ் 2019 டிஜிட்டல் விருதுகள். முதல் விருது ஹிப்காப் தமிழனுக்கா அல்லது கெளதம் வாசுதேவ மேனனுக்கா..?

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் விருதுகளை அறிவிப்பதில் டைஸ் தமிழ் பெருமைப்படுகிறது. 2019ம் ஆண்டின் சிறந்த வெப்சீரிஸ் எதுவென முதலில் பார்க்கலாம்.

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நாலைந்து வருடங்களாகவே வெப்சீரிஸ் மிகவும் பிரபலமாக இருந்துவரும் நிலையில், இந்த ஆண்டுதான் தமிழில் வேகம் எடுத்துள்ளது. ஆட்டோ சங்கரின் கதை பரபரப்பான ஒன்றாக பேசப்பட்டது. 

இதையடுத்து முக்கியமான வெப்சீரிஸ் என்றால் கெளதம் வாசுதேவ மேனனின் குயின் மற்றும் ஹிப்காப் தமிழாவின் தமிழி. ஜெயலலிதாவின் கதை என்பதால் சட்டென குயின் தமிழகம் முழுவதும் பற்றிக்கொண்டது. எந்த வகையிலும் தொடருக்கு தடை வந்துவிடக் கூடாது என்று அனைத்து கேரக்டர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 

ஜெயலலிதாவின் கதை என்று பார்க்காமல், ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணம் என்று பார்த்தால் அற்புதமான படைப்பு என்று உறுதியாகச் சொல்ல முடியும். இதையடுத்து இந்த வகையில் போட்டிக்கு நிற்பது ஹிப்காப் தமிழாவின் தமிழி.

இதுவரை தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்று சொல்லும் தமிழ் அறிஞர்களோ, திராவிட கட்சியினரோ யாருமே இப்படியொரு முயற்சி எடுத்ததே இல்லை. தமிழ் மொழியின் வரலாற்றை, வரலாற்று ஆய்வாளர் மூலம் தோண்டியெடுத்து சொல்லியிருப்பது, தமிழுக்கு ஹிப்காப் தமிழன் செய்திருக்கும் மரியாதை.

தமிழுக்கு மரியாதை செய்திருக்கும் ஹிப்காப் தமிழனுக்கு மரியாதை செய்யவேண்டியது நமது கடமை. இதனை ஒவ்வொரு பள்ளி, கல்லூரிக்கும் கொண்டுபோய் சேர்ப்பதும் நமது கடமை. அந்த வகையில் வாழவைத்த தமிழுக்கு உண்மையாகவே நன்றி செலுத்தியிருக்கும் ஹிப்காப் தமிழினின் தமிழிக்கு விருது வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் ஹிப்காப் தமிழா.