டைம்ஸ் தமிழ் 2019 இசை விருதுகள். பாடகி ஷிரேயா கோஷலுக்கும் மாதுராவுக்கும் போட்டி

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


2019ம் ஆண்டின் சிறந்த சினிமா விருதுகள் அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. வெற்றி பெறும் கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 

சிறந்த பாடகிகளை தேர்வு செய்வது கொஞ்சம் கடினமான பணியே. ஏனென்றால் ஒருசில பாடல் என்றாலும் சிலர் அற்புதமாக பாடியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு உனக்காக வாழ நினைக்கிறேன் என்ற பிகில் பாடலை, மாதுரா தாராவின் குரல் மிகவும் அற்புதம். ஏ.ஆர்.ரஹ்மானின் அறிமுகம் எப்படியிருக்கும் என்று சொல்லவே வேண்டியதில்லை.

அடுத்து, சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சாஷா திரிபாதி பாடிய ஆத்தி யாரடி பாடலும் தனித்தன்மை வாய்ந்தது. அந்த குரல்வளம் கேட்பவரை கட்டிப்போடும் அளவுக்கு இனிமையானது. இவர் காற்றுவெளியிடை படத்தில் வான் வருவான் பாடல் பாடி தேசிய விருது வாங்கியவர் என்பது நினைவில் இருக்கும். காந்தக் குரலால் இந்த ஆண்டும் கட்டிப் போட்டிருக்கிறார் சாஷா திரிபாதி.

இவர்கள் எல்லோரையும் மீறி, இந்த ஆண்டு மிக அற்புதமான ஒர் பாடலைக் கொடுத்திருக்கிறார் ஷ்ரேயா கோசல். இவர் தன்னுடைய பயணத்தை ச ரி க ம ப என்ற போட்டியில் வென்றதன் மூலம் ஆரம்பித்தார். அதன் பிறகு ஹிந்தியில் தேவதாஸ் படத்தின் மூலம் பாட ஆரம்பித்தார்

தமிழர்களுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷ்ரேயா ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், பெங்காலி, மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா மற்றும் பஞ்சாபி போன்ற பல்வேறு வகையான மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். 

இந்த 2019ம் ஆண்டு இவர் நம்மவீட்டுப் பிள்ளை படத்தில் பாடிய மைலாஞ்சி பாடம் செம ஹிட். வித்தியாசமான குரல்வளத்துடன் அந்த பாடலை ஹிட் அடையச் செய்த ஷ்ரேயா கோசலே,இந்த ஆண்டு சிறந்த பாடகிக்கான விருதைப் பெறுகிறார். வாழ்த்துக்கள் ஷ்ரேயா.