அடுத்து என்ன அடல்ட் ஒன்லி படத்தில் ஹீரோயினா? பகீர் கேள்விக்கு டிக்டாக் இலக்கியா அளித்த சுளீர் பதில்!

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டிக்குப் போட்டியாக இலக்கியா என்ற இளம்பெண் களத்தில் இறங்கியுள்ளார்.


ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஆபாசமான கருத்துகளை வெளியிடுவது ஸ்ரீரெட்டியின் வழக்கம். குறிப்பாக, இவர் சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஷாலின் ஆண் உறுப்பு அனகோண்டா போல பெரியதாக இருக்கும், என்று கூறிய விசயம்  பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோல மேலும் பல பாலியல் புகார்களை சக நடிகர்கள், இயக்குனர்கள் மீது  ஸ்ரீரெட்டி கூறி வருகிறார். இதனால், சமூக ஊடகங்களில் ஸ்ரீரெட்டிக்கு தனி வரவேற்பு உள்ளது.  

இந்நிலையில், ஸ்ரீரெட்டியின் பாணியை பின்பற்றி தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் களத்தில் இறங்கியுள்ளார். அவரது பெயர் இலக்கியா.  10வது வரை படித்துள்ள இலக்கியாவுக்கு தற்போது 21 வயது. ஆனால், டிக் டாக்கில் இவர் செய்யும் சேட்டைகள், பலரையும் வாயை திறந்து வேடிக்கை பார்க்க வைத்துள்ளது.  தினசரி வித விதமான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடும் இலக்கியா பார்க்க நடிகை அஞ்சலி போல இருப்பார். ஆனால், செய்கிற செயல் ஒவ்வொன்றும் சில்க் ஸ்மிதாவை தோற்கடிக்கக்கூடியதாக உள்ளதென்று,  டிக் டாக் பயனாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  

டிக் டாக் பயனாளர்களை சூடேற்றும் வகையில் ஆபாசமான பதிவுகளை வெளியிட்டு வரும் இலக்கியா, சமீபத்தில் ஆன்லைன் ஊடகம் ஒன்றுக்கு  பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ''எனக்கு நிறைய சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதற்காக, நிறைய பேருடன்  படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் நேரிட்டது. அதுபற்றி நான் கவலைப்படவில்லை. சிலர், மிகவும் லோ பட்ஜெட் படங்களில் நடிக்கும்படி வலியுறுத்துகின்றனர்.  அது எனக்கு செட் ஆகவில்லை. இதனால், சிலருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள நான் மறுத்துவிட்டேன். உடனே என்னை அவர்கள்   படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்,'' என்று குறிப்பிட்டார்.  

  இந்த பேட்டியின்போது, கேள்வி கேட்ட தொகுப்பாளர், ''லோ பட்ஜெட் படம் என்றால், ஆபாசப் படமா? பொதுவாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில்  சாஃப்ட்கோர் வகையான ஆபாச படங்களை லோ பட்ஜெட்டில் எடுப்பார்கள். அந்த மாதிரியான படங்களில் நடிக்க  உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?,'' என்று ஒரு கேள்வியை வீசினார்.  இதில் கடுப்பான இலக்கியா உடனடியாக மைக்கை கழட்டி வீசிவிட்டு, இது அவசியம் இல்லாத கேள்வி எனக் கூறிச் சென்றுவிட்டார். பிறகு, அவரை சமாதானப்படுத்தி பேட்டியை தொடர்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.  டிக் டாக் வருகையால் தடுக்கி விழுந்தவர்கள் எல்லாம் பிரபலங்களாக மாறி வருகின்றனர் என்பதற்கு இச்செய்தி ஒரு நல்ல உதாரணம்...