2 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் காலி! இணையதளங்களையே முடங்க வைத்த அவெஞ்சர்ஸ் என்ட் கேம்!

அவென்ஜர்ஸ் எண்ட்கேம் என்ற படத்தின் டிக்கெட்டுகள் விற்பனை இன்று கலைக்கட்டியது.


இந்தியாவில்  நள்ளிரவு  12 மணிக்கு  முன்பதிவு ஆரம்பித்தது. மார்வெல் சினிமா பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து 22 திரைப்படங்களும் திரையிடப்படுகிறது.எண்ட்கேம்  உடன் முடிவடையவும் வகையில்  சில இடங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த படம் இந்தியாவில் வெளியிடப்படும் என்ற தகவல் தெரிந்தவுடன் நிறைய ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியையும்,ஆரவாரத்தையும்  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொண்டனர்.   

மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்  ("MARVEL CINEMATIC UNIVERSE") என்ற  நிறுவனம்  இப்படத்தை வெளியிடுகின்றது. இதற்கு இந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்களுண்டு. ஆன்லைனில் டிக்கெட் விற்பனை அலைமோதியது. சிலருக்கு அதிர்ஷ்டவசமாக முதல் அல்லது இரண்டாவது காட்சிகள் கிடைத்துள்ளன. பலருக்கு  டிக்கெட் விற்பனை மும்முரத்தினால் நேரம் கழித்து டிக்கெட்டுகள் கிடைத்துள்ளன.

தற்போதே ரசிகர்களின் ஆரவாரத்தை தாங்க இயலாமல் டிக்கெட் விற்பனைத்தளங்கள் முடங்கின. இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். இப்படியே போனால் திரையிரங்க உரிமையாளர்களுக்கு கோடைக்காலத்தில் மிகப்பெரிய லாபம் காத்துக்கிடக்கின்றது.