ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்கிறது! ஆன்லைனில் புக் செய்பவர்களுக்கு மோடி அரசு அதிர்ச்சி வைத்தியம்!

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கட்டணம் வசூலிக்க போவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.


நிதி அமைச்சகம் கடந்த சில மாதங்களாகவே வருவாயை அதிகரிப்பதற்கு ரயில்வே துறையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இதில் ஒன்றாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு பணம் வசூலிக்கப்படும் முறையை பரிசீலிக்குமாறு ரயில்வே அமைச்சகத்திடம் கேட்டு வந்துள்ளது. 

டிஜிட்டல் டிக்கெட் பதிவுகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசானது ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுவதற்கு செலுத்தவேண்டிய பணத்தை ரத்து செய்தது. இந்த அறிவிப்பினால் கடந்த சில வருடங்களாகவே ரயில்வே அமைச்சகம் நஷ்டத்தை செல்வதாக தகவல்கள் வெளியாயின.

கஷ்டத்தில் இருந்து மீள்வதற்காக இனி சாதாரண கம்பார்ட்மென்ட்களில் முன்பதிவு செய்வதற்கு 20 ரூபாயும், ஏசி கம்பார்ட்மெண்டில் முன்பதிவு செய்வதற்கு 40 ரூபாயும் கூடுதலாகவும் வசூலிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட் விலை இனிவரும் காலங்களில் அதிகரிக்கப் போவது உறுதியாகிவிட்டது.