கொரோனாவின் துவக்கம்..! சீனாவின் மர்ம ஆய்வகம்..! அங்கு நடப்பது என்ன? மறைந்திருக்கும் பரபர தகவல்கள்!

கொரோனா வைரஸின் பிறப்பிடமான வூஹான் வைரஸ் ஆய்வகத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 14,60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த வைரஸ் முதன் முதலில் சீனா நாட்டின் வூஹான் மாகாணத்திலுள்ள "வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி" என்ற ஆய்வகத்தில் ஏற்பட்ட தவறினால் வெளியானதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஆய்வகத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்குள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்கள் போன்று வேடமணிந்து பணியாற்றிவரும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

2002-03 உலகையே சார்ஸ் நோய் அச்சுறுத்தியது. உலகம் முழுவதிலும் 800 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் உண்டானதன் பிறகு, இதனை ஆய்வு செய்வதற்காக பிரபல ஆய்வகம் ஒன்றை வடிவமைக்க சீனா நாட்டு விஞ்ஞானிகள் முடிவெடுத்தனர். அதன்படி பிரான்ஸ் நாட்டு கட்டட கலைஞர்களின் உதவியோடு 15 ஆண்டுகள் உழைப்பிற்கு பிறகு இந்த ஆய்வகம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது அந்நகரத்தின் கடல் சந்தையிலிருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வகத்தில் கிட்டத்தட்ட 1,500 கொடிய வைரஸ்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வவ்வால்களிலிருந்து வெளிவரும் வைரஸ்களை ஆய்வு செய்வதற்கு இங்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட சிறிய பிழையினால், வூஹான் கடல் சந்தைக்கு கொரோனா வைரஸ் பரவியதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த ஆய்வகத்தின் இயக்குனர் அவற்றை திட்டவட்டமாக மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.