ஸ்டெர்லைட்டும் புற்று நோயும்! பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையும்! உண்மையை உணர வைத்த நாடகம்!

டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளி மாணவர்களின் நாடக விழா , இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.


டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளி மாணவர்களின் நாடக விழா , இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. இங்கு நாடகத்துறையில் மூன்றாண்டு பட்ட்ப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இறுதி ஆண்டின் பட்டமளிப்பு விழாவிற்கு முன்பாக அவர்களே எழுதித் தயாரித்த நாடகங்களை அரங்கேற்றுவார்கள்.

அப்படி இந்த ஆண்டு நடைபெற்ற நாடக விழாவில் ,நேற்று மாலை 7 மணிக்கு அபிமஞ்ச் அரங்கில்' தூத்துக்குடி படுகொலை 13 ( thoothukudi massacre 13 ) என்கிற ஒரு மணிநேர  நாடகத்தை நிகழ்த்தினர். தமிழ் , இந்தி,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தை எழுதி,வடிவமைத்த மாணவரின் பெயர் ஜி .பாலசுப்பிரமணியன்.

தமிழகத்தில் தூத்துக்குடி படுகொலை பற்றிப் பேசக்கூட அரசு அனுமதிக்காத நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையால் புற்று நோய் வந்து துன்புறும் ஒரு பெண்ணை மையமாக வைத்து நடிக்கப்பட்ட இந்த நாடகம் பார்வையாளர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.