இரவு நேரம்! தனிமையில் பெண்கள்! பாதுகாப்பாக வீடு திரும்ப இலவச வாகன சேவை! எங்கு தெரியுமா?

இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கு கர்நாடகா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.


இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்கள் தங்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்வதற்காக பஞ்சாப் மற்றும் தெலுங்கானா காவல்துறையினர் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதேபோன்று தற்போது கர்நாடக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் பத்திரமாக வீட்டிற்கு செல்வதற்காக புதிய வாகன சேவையை கர்நாடக காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். அதாவது நாங்கள் சேர வேண்டிய இடத்திற்கு செல்வதற்காக வாகனமின்றி தவிக்கும் இளம் பெண்கள் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு தாங்கள் இருக்கும் இடத்தை தெரிவித்தால், உடனடியாக காவல் வாகனங்கள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சேரவேண்டிய இடத்திற்கு கொண்டு சேரும்.

இதற்காக பெண்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த செயல்பாடு முறையானது ஏற்கனவே பஞ்சாப் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு பத்திரமாக செல்லலாம் என்று கர்நாடகா காவல்துறையினர் கூறி வருகின்றனர்.

இந்த முயற்சிக்கு கர்நாடகா மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்.