ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை உறுதிசெய்வதற்கு இதுதான் வழி !!

கர்ப்பிணியின் வயிற்றுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பதை முன்கூட்டியே ஸ்கேன் மூலம் உறுதி செய்வது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தாய்க்கும் சேய்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கமுடியும்.


              முன்கூட்டியே ஸ்கேன் செய்துபார்க்கும்போது தொப்புள் கொடி ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

              ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், முழுமையான ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்கவேண்டியது மிகவும் அவசியம்.

              சில சமயங்களில் தானாகவே ஒரு குழந்தை கரைந்துபோவதுண்டு, இதனையும் ஸ்கேன் மூலம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

              பொதுவாக இரட்டைக் குழந்தைகள் விவகாரத்தில் காணப்படும் வளர்ச்சி குறைபாடு, ஒன்றையொன்று நெருக்குதல் போன்றவைகளையும் ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்.

கருவில் இருக்கும் குழந்தைகளின் அவயக்குறைபாடு மற்றும் சிக்கல்களை கண்டறிவது ஸ்கேனில் சாத்தியம் இல்லை என்றாலும், ஸ்கேன் மூலம் இரட்டைக் குழந்தைகளை உறுதிபடுத்துவதன் மூலம் தாய்க்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.