கொரானாவிடம் இருந்து தப்பிக்க இது ஒன்று தான் வழி! உலகம் முழுவதும் வைரலாகும் வீடியோ உள்ளே!

கொரானா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கான வழி என்ன என்று கேட்ட மஹிந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் அவர்களுக்கு ஒரு சூப்பரான வழி கிடைத்துள்ளதாக கூறி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு செய்திருக்கிறார்.


உலகில் உள்ள அனைத்து மக்களையும் அச்சுறுத்தும் விதமாக இருந்து வரும் கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக பலரும் பலவிதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான மருந்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

இதுவரை சீனாவில் மட்டும் 80,000 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டும், 3000 ஆயிரம் பேர் உயிரிழந்தும் உள்ளனர். சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா தாய்லாந்து ஈரான் என பல நாடுகளிலும் இந்த நோய் வேகமாக பரவி அதனுடைய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்த குர்ஆனை பாதிப்பால் இயல்பான சூழ்நிலை ஏற்படாமல் மக்கள் அனைவரும் தங்களுடைய அன்றாட வேலைகளை கூட செய்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனைப் பார்த்த மஹிந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா டுவிட்டர் பக்கத்தில் அன்றாட வேலைகளை எப்படி பார்ப்பது எனவும் அதற்கான ஐடியாக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் எனவும் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார்.

உன்னை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களையும் புதிய ஐடியாக்களை அவருடன் பகிர்ந்து கொண்டனர். அதில் அவருக்கு பிடித்தமான ஒரு ஐடியாவை அவர் தேர்ந்தெடுத்து இருக்கிறார் . அது தான் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் அவர் இதற்கான வீடியோவையும் அவரது பதிவில் இணைத்திருக்கிறார்.

அந்த வீடியோ பதிவில் ஒருவர் தன்னுடைய செல்ல நாய் இடம் சீட்டு ஒன்றில் தனக்கு தேவையான பொருட்களின் பெயரை எழுதி பையில் போட்டு வைக்கிறார். அந்த நாய் அந்த பையை மாட்டிக்கொண்டு பொம்மை காரில் ஏறிக்கொண்டு கடைக்கு சென்று கடைக்காரரிடம் அந்த சீட்டை காண்பிக்கிறது.

அந்த சீட்டில் இருப்பதை பார்த்த கடைக்காரர் தேவையான பொருட்களை அந்த நாயின் பையில் வைத்து விடுகிறார். என்னை பெற்றுக்கொண்ட அந்த நாய் மீண்டும் தன்னுடைய முதலாளியிடம் சென்று தான் பெற்று வந்த பொருட்களை ஒப்படைக்கிறது.

இந்த வீடியோ பதிவுதான் தன்னை மிகவும் ஈர்த்து உள்ளதாகவும் இதை நாம் பின்பற்றிக் கொள்ளலாம் எனவும் அவர் கமெண்ட் செய்துள்ளார். இதன் மூலம் நம்மால் பாதிப்பில் இருந்து எளிதாக தற்காத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.