சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சைரா நரசிம்ம ரெட்டியின் கதை இதுதாங்க!

அப்படியே கட்டபொம்மன் கதைதான். கட்ட பொம்மன் காலத்துக்கு 50 வருடம் பின்னால் நடந்த கதை.


உய்யலவாடா என்பது ஒரு ஜமீன். நரசிம்ம ரெட்டி என்பவர் ஜமீந்தாராக இருந்த போது ஹைதராபாத் நிஜாம் ராயலசீமா பகுதியில் வரிவசூலிக்கும் பொறுப்பை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்து விடுகிறார். அதை எதிர்த்து வரிகொடுக்க மறுத்த நரசிம்ம ரெட்டியின் கதையை நிறைய மசாலா சேர்த்து படமாக்கி இருக்கிறார்கள்.

2000ம் வீரர்களும் 60 கிராமங்களும் கொண்டது அவரது ஜமீன்.தனது வீரர்களுடன் கிளம்பிப் போய் கொய்யல குண்டா என்கிற ஊரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கருவூலத்தை கொள்ளையிடுகிறார்.அந்த முதல் வெற்றிதந்த ஊக்கத்தில் இன்றய பிரகாசம் மாவட்டத்தில் இருக்கும் கம்பம் என்கிற ஊரை நோக்கி கிளம்புகிறார்.

வழியில் ருந்ராவரம் காட்டுப் பகுதியில் இருந்த ரேஞ்சரை கொலை செய்துவிட்டு நல்லமல்ல காட்டுக்குள் போய் மறைந்து கொள்கிறார்.(இப்போது இந்தக் காடுதான் மாவோயிஸ்ட்கள் வாழ்விடம்) . நரசிம்ம ரெட்டியின் தலைக்கு 1000ரூபாய் விலை வைக்கிறது.1846 அக்டோபர் மாதம் நரசிம்ம ரெட்டி,அவரது பதினைந்து வயது மகன்,மற்றும் 128 படை வீரர்களை கைது செய்கிறது ஆங்கில படை.

கம்பம் கலக்டர் விசாரித்து நரசிம்ம ரெட்டிக்கும் அவரது மகனுக்கும் தூக்குத் தண்டனை வழங்கினார்.1847 பிப்ரவரி மாதம் 22ம் தேதி நரசிம்ம ரெட்டி தூக்கிலிடப்பட்டார். அவரது வீரர்கள் அந்த மானுக்கு நாடுகடத்தப்பட்டனர்.அவளவுதான் கதை.மார்கெட்டிங்குக்காக விஜய சேதுபதி,அமிதாப்,சுதீப்,பாரத் மாதாக்கீ ஜே எல்லாம் சேர்த்து நான்கு மொழிகளில் பரிமாறப் போகிறார்கள்.