புரட்சியாளர் போன்று அரசியல் கட்சிகளை எதிர்த்து டயலாக் பேசிவரும் நடிகர் விஜய், தன்னுடைய படத்தின் ரிலீஸுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்த விஜய்… காரணம் இதுதான்.
விஜய் நடிப்பில். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக வேண்டியது.
கொரோனா இதனை கொத்துப்புரோட்டா போட்டுவிட்டது.. இந்நிலையில், படத்தை வரும் பொங்கல் தின சிறப்பாக ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப் படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால், இப்போதைக்குத் திரையரங்கில் 50 சதவிகிதம் மட்டுமே அரங்கம் நிறையும் காட்சிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. இந்த அளவில் டிக்கெட் கொடுத்தால் கட்டுப்படியாகாது என்பதுதான் விஜய்யின் நிலைமை.
அதனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து, கோரிக்கை வைத்திருக்கிறார்., திரையரங்குகள் 100% திறக்கப்பட்டால் மட்டுமே சினிமாவுக்கு உயிர் திரும்பும். அதற்கு மனதுவைக்க வேண்டும் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.
விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கொடுத்திருப்பதாகவே சொல்லப்படுகிறது. ஆகவே, விஜய் டீம் சந்தோஷமாகவே இருக்கிறது. எப்படியோ எடப்பாடியார் புண்ணியத்தில் மாஸ்டர் ரிலீஸ் ஆகிறது.