கொரோனா வைரஸ் அல்லா அனுப்பி வைத்த சிப்பாய்..! பீதியை அதிகரிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்! என்ன செய்யப்போகிறார்கள்?

கொரோனா வைரஸ் என்பது அல்லாவின் சிப்பாய் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ளது வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 14,60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இந்த கொடிய நோயானது "அல்லாஹ்வின் சிப்பாய்" என்று கூறப்படும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த துயர சூழ்நிலையை பயன்படுத்தி ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் தங்களை வலிமைபடுத்திக்கொள்ள முயற்சிப்பதாக தெரியவருகிறது.

மேற்கூறப்பட்ட வீடியோவில் சிகாகோ மற்றும் லண்டன் நகரங்களில் அமைந்துள்ள டவர் பாலங்கள் சித்தரிக்கப்பட்டு அவற்றுக்கு அபாயகரமான வார்த்தைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மேற்குலகில் வாழும் கடவுளின் கோபத்தினாலேயே இந்த கொடிய நோய் உருவானதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தொற்றுநோய் பெரிதாக தாக்கியுள்ள மேற்கத்திய நாடுகளை குறிவைத்து இந்த ஐ.எஸ் அமைப்பினர் ஏதேனும் நாச வேலைகளில் ஈடுபடலாம் என்று எஸ்.ஐ.டி புலனாய்வு அமைப்பினர் கருதுகின்றனர். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.