சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக நடிப்பதற்காக நடிகை மீனா தன்னுடைய உடல் எடையை குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிக்காக நடிகை மீனா செய்த செயல்! ஆச்சரியத்தில் அண்ணாத்த படக்குழு! என்ன தெரியுமா?

1990-களில் கோலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக நடிகை மீனா திகழ்ந்தார். அப்போதைய முன்னணி கதாநாயகர்களாக ரஜினி, கமல், சரத்குமார், பிரபு ஆகியோருடன் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்பு வரை பல படங்களில் நடித்து வந்த மீனா, திருமணத்திற்குப் பின் வரும் தான் நடிக்கும் படங்களை குறைத்து கொண்டார்.
இவருடைய மகள் "தெறி" திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடித்திருந்தார். இதனிடையே 24 வருடங்களுக்கு பிறகு "அண்ணாத்த" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்க போவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகை மீனா ரஜினிகாந்த்துடன் முத்து, எஜமான், வீரா ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் மீனா ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்க உள்ளார். இதற்காக மீனா தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மான தோற்றமளிக்கிறார். இவர் ஸ்லிம்மாக தோற்றமளிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
படத்தில் ரஜினிக்கு ஈடான எடையுடன் காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக நடிகை மீனா இரவு பகலாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை குறைத்துள்ளாராம்.