திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி காலமானார். அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்!

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் கே.பி.பி. சாமி (வயது 57) உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்துவரும் கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலனின்றி கேபிபி சாமி தன்னுடைய வீட்டில் இன்று காலை உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திமுக கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் கட்சியை சார்ந்த பிரமுகர்கள் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.பி.பி. சாமியின் உயிரிழப்பு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரை மீன்வளத் துறை அமைச்சராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் திமுகவின் மீனவரணி செயலாளராகவும் இருந்து வந்தார்.