சென்னைக்கு வணிகம் செய்ய வந்த வெள்ளைக்காரர்கள் படிப்படியாக தங்களின் ஆளுமையை உறுதிப்படுத்திக் கொண்ட சமயம் அது.
திருவண்ணாமலை வேண்டாம்! சென்னையிலேயே இருக்கிறது அண்ணாமலையார் கோவில்! எங்கு தெரியுமா?
உள்ளூர் மக்களின் மூலமே வியாபாரத்தையும் மதத்தையும் பெருக்க நினைத்தவர்கள் ஆதிகுடிகள் குடியிருந்த பகுதியில் கருப்புச்சென்னை என அழைத்தனர். இப்பகுதியில் தமிழகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கூடி வாழ்ந்தனர். அவர்கள் பிரதான தெய்வங்கள், குலதெய்வங்கள், அபிமான தெய்வங்களுக்கு கோயிலமைத்து வழிபட்டு வந்தனர்.
அப்பொழுது மயிலாப்பூரை சேர்ந்த பக்தர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரையும் வைகாசி பிரமோற்சவத்திற்கு காஞ்சிபுரமும் சென்று வரதராஜப் பெருமாளையும் தரிசித்து வருவது வழக்கம்.
அவருக்கு புத்திரபாக்கியம் வாய்க்காத நிலையில் அண்ணாமலை அருணாச்சலேஸ்வரரிடமும் காஞ்சி வரதரிடமும் வேண்டிக் கொண்டார். ஒருநாள் அவரது கனவில் இறைவன் தோன்றி சென்னையில் ஒரு சன்னதியும் கட்டுமலையும் அமைத்துப் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து கட்டுமலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்றார்.
கனவு கலைந்து எழுந்த பக்தர், சென்னை சௌகார்பேட்டையில் தனக்குச் சொந்தமான வீட்டில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய எண்ணினார். அகோரிகள் மூலமாக காசியிலிருந்து பாணலிங்கம் தருவித்தார். அதனுடன் விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், வராகி, காளி, பைரவரையும் பிரதிஷ்டை செய்து கட்டுமலை கட்டி அதில் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். அடுத்த வருடமே அவருக்கு புத்திர பாக்கியம் உண்டானது.
கைமேல் பலன் தந்த கடவுளின் கருணையை எண்ணி மகிழ்ந்த அவர் கட்டப்பட்டுள்ள கோயிலுக்குப் பின்புறம் உள்ள இடத்தையும் வாங்கி தனது இஷ்ட தெய்வங்களான அருணாச்சலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாளுக்கு தனித்தனி கோயில்கள் அனைத்தும் 1765-ம் ஆண்டு நித்திய பூஜை நல்லபடி நடக்க கட்டளைகள் ஏற்படுத்தி குடமுழுக்கும் செய்தார்.
முதலில் கட்டியது சின்னக்கோயில் அல்லது அணி அண்ணாமலையார் கோவில் எனவும் பின்னர் எடுத்தது பெரிய கோவில் என்றும் அருணாச்சலேஸ்வரர் வரதராஜ பெருமாள் திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் நடப்பது போல் இங்கும் கார்த்திகை மாதத்தில் தீபத் திருநாளையொட்டி 10 நாள் திருவிழா நடக்கிறது.
காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாளை தரிசிக்க இயலாதவர்களும் இத்தலப்பெருமாளை தரிசித்து அருளைப் பெறுகின்றனர். அருகில் கிழக்கு நோக்கி ஆஞ்சநேயர் சேவை சாதிக்கிறார். வடைமாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் சாத்துதல் இவருக்கு வேண்டி செய்து கொள்ளும் பிரார்த்தனையாக உள்ளது