தி.மு.க. உண்ணாவிரதப் பந்தலில் திருநாவுக்கரசருக்கு பெருத்த அவமானம்.. கூட்டணியில் குழப்பம் வருமா..?

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில், தி.மு.க. கட்சியானது, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.


அந்த விழாவுக்கு வருகை தந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு பெருத்த அவமானம் நடந்துள்ளது. இதை தட்டிக்கேட்க வேண்டிய திமுக தலைவர் ஸ்டாலின், அதனை கண்டுகொள்ளாதது காங்கிரஸ் கட்சியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தில் தலைவர்கள் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பிற நிர்வாகிகள் உட்காருவதற்கு தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் அழகிரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான இருக்கை காலியாக இருந்தது. அந்த இடத்தில் திருநாவுக்கரசர் அமர்ந்தார்.

உடனே தி.மு.க.வினர் கோபமானார்கள். ஏனென்றால் அந்த இடத்தை தங்கபாலுக்கு ஒதுக்கியிருந்தார்களாம். உடனே தி.மு.க.வினர் வலுக்கட்டாயமாக திருநாவுக்கரசரை அந்த இடத்தில் இருந்து எழுப்பி கீழே அமர வைத்தனர். இந்த விஷயத்தால் கடும் எரிச்சல் அடைந்த திருநாவுக்கரசர், உடனே கூட்டத்தில் இருந்து வெளியேற விரும்பினார்.

அதனால், உடனே எனக்கு சில நிமிடங்கள் கொடுங்கள், பேசிவிட்டுக் கிளம்புகிறேன் என்று தி.மு.க.வினரிடம் கேட்டுப் பார்த்தார். அதனையும் தி.மு.க .மறுத்துவிட்டது. இத்தனை அவமானம் தேவையா என்று திருநாவுக்கரசரும் அவரது ஆதரவாளர்களும் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டனர்.

இதுகுறித்து டெல்லிக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் திருநாவுக்கரசர். இந்த விவகாரம் கூட்டணியை உடைக்கும் அளவுக்கு சிக்கலாகுமா என்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்வமாக பார்த்துவருகின்றனர்.