போலீஸ் வருவதற்கு முன்பே உடைக்கப்பட்ட திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு கதவு! முக்கிய வீடியோக்கள் திருடப்பட்ட தன் பரபரப்பு பின்னணி!

பொள்ளாச்சி வீடியோ விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது முதலே அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. விசாரணைக்கு மாற்றப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே cbcid ஐஜி ஸ்ரீதர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு எஸ்பி நசாவுடன் வருகை தந்திருந்தார்.


ஐ ஜி தலைமையிலான போலீசார் நேராக ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு தான் சென்றனர். அங்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பண்ணை வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தன.

சிபிசிஐடி போலீசார் பண்ணை வீட்டுக்கு வரும் தகவல் அறிந்து உடனடியாக அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த வீடியோ உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை யாரோ சிலர் திருடிச் சென்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு வருகிறார்கள் என்கிற தகவலை கசியவிட்டது யார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் இருந்து திருடப்பட்ட வீடியோக்களை சிபிசிஐடி போலீசார் எப்படி கைப்பற்ற போகிறார்கள் என்கிற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. பொள்ளாச்சி வீடியோ விவகாரம் இப்படி பிரச்சனை மேல் பிரச்சனை ஆகவும் சர்ச்சை மேல் சாட்சியாகவும் சென்று கொண்டிருப்பதால் ஆளும் தமிழக அரசுக்கு மட்டுமில்லாமல் போலீஸாருக்கும் ஒரு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

திருநாவுக்கரசன் பண்ணை வீட்டில் தொடர்ந்து திருநாவுக்கரசின் பொள்ளாச்சி வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு என்ன கிடைத்தது என்கிற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.