உதயசூரியன் வேண்டாம்! திருமாவை நெருக்கும் சிறுத்தைகள்!

விசிக - திமுக


இரண்டு தொகுதிகள் என்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், நாங்களே முழு செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, ஜெயிக்க வைக்கிறோம் என்பதுதான் திருமாவளவனிடம் தி.மு.க. போட்ட நிபந்தனை.

முதல் சுற்று பேச்சுவார்த்தையின்போது தனிச்சின்னத்தில் நிற்போம் என்று உறுதியாகச் சொன்ன திருமாவால் இப்போது, அத்தனை உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம் இன்னொரு சீட்டில் நிற்கப்போகும் ரவிக்குமாருக்கு யாரும் பணம் செலவழிக்க மாட்டார்கள். கட்சியிலும் போதிய நிதி இல்லை.

அதனால் தனி சின்னத்தில் நிற்கும்பட்சத்தில் சொந்தமாக பணம் செலவழிக்க வேண்டும், அது மட்டுமின்றி தி.மு.க.வினர்களும் முழுமையான இணக்கத்துடன் வேலை பார்க்க மாட்டார்கள். அதனால் வெற்றி வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்திலே நிற்கலாமா என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார் திருமா.

ஆனால், திருமாவின் முடிவை, கட்சியின் சிறுத்தைகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதுவரை அனைத்து தேர்தலிலும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிட்டோம், இந்த தேர்தலிலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திருமாவிடம் வலியுத்தி வருகின்றார்கள்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமானால், திருமா முதலில் திமுகவின் உறுப்பினராக வேண்டும். அவ்வாறு உறுப்பினரானால், வி.சி.க.வின் பதிவு எண் ரத்து செய்யப்படும். அடுத்ததாக வி.சி.க.வின் தலைவர் என்கிற பெயரில் அவர் அறிக்கை கொடுப்பதுகூட சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

மேலும் இன்னொரு பிரச்சனை விசிக-விற்கு உள்ளது. இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றால்தான் கட்சி அங்கீகாரத்தை பெற முடியும்.

அதனால், எப்படியேனும் மோதிரத்தில் நிற்கலாம் என்றுவிடத்தான் ஆசைப்படுகிறர் திருமா.

அவரது ஆசை நிறைவேறட்டும்.